விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக களம் காண்கின்றன.

அந்த வகையில், அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வன் தான் போட்டியிடும் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி பேரூராட்சியில் கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் வணிகர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் படத்திற்கு முத்தமிழ்ச்செல்வன் மரியாதை செலுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே