விக்கிரவாண்டியில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

நாங்குநேரி விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம், 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை அளித்தனர்.

அதேபோல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் பாரதி ஆய்வு செய்தார்.

புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே