வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என்ற தகவலுக்கு மறுப்பு

செப்டம்பர் மாத இறுதியில் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என்று பரவிய செய்திக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.

மாதத்தின் 4 ஆவது சனிக்கிழமை என்பதால் 28 ஆம் தேதியும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதாலும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கும் சேர்த்து 7 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும் என்று நாடு முழுவதும் செய்தி பரவியது.

இதனால் ஏராளமான பொதுமக்கள் ஏடிஎம் வாசல்களில் காத்திருந்து பணம் எடுத்து செல்கின்றனர்.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள வங்கி அதிகாரிகள், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள தினத்திலும் வழக்கமான வங்கி நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

அதே போல் அரை நிதியாண்டு கணக்கு முடிக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதியும், அக்டோபர் ஒன்றாம் தேதியும் விடுமுறை இல்லை என்று வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கி தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் வழக்கமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே