வங்கிகளின் பணப்பரிவர்த்தனை ஸ்தம்பித்ததால் வாடிக்கையாளர்கள் கலக்கம்

நேற்று வங்கிகளின் பங்கு விலை சரிந்த வேளையில், தனியார் வங்கிகளின் பணப்பரிவர்த்தனை ஸ்தம்பித்ததால், வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்தனர்.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நிதி முறைகேடு நடைபெற்று இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, நேற்று பல்வேறு வங்கிகளின் பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்தது.

தாங்கள் வைத்திருந்த பங்குகளை முதலீட்டாளர்கள் தாராளமாக விற்றதே இதற்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் யெஸ், எச்.டி.எஃப்.சி., கோட்டக் மகிந்திரா, ஐடிஎப்சி உள்ளிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணையதள பரிவர்த்தனைகளில் கடும் சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

பரிவர்த்தனைகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்ததால் அவர்கள் அவதியுற்றனர். பரிவர்த்தனை தோல்வி அடைந்ததையும், வங்கிகளின் பங்கு விலை வீழ்ச்சியையும் முடிச்சு போட்டு பரவிய வதந்திகள் வாடிக்கையாளர்களைக் கலக்கம் அடையச் செய்தன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தனியார் வங்கிகள், நேற்றைய தினம் சம்பள தேதி என்பதாலும், பண்டிகை கால விற்பனைகள் களைகட்டியுள்ளதாலும், இணையதள பரிவர்த்தனையில் கடும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.

மாலையில் ஓரளவு நிலைமை சீரடைந்து விட்டதாக அந்த வங்கிகள் கூறியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே