ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது : நவாஸ் கனி

ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்து உள்ளார்.

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை நவாஸ்கனி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத் தென் தபால் துறை இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பாஸ்போர்ட் சேவை மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்றும் எம்.பி.நவாஸ்கனி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே