வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பினர்.

வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய் யக்கோரி அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பினர் சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இது குறித்து அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் ஆலோசகர் விஜயகுமார் கூறியதாவது: மிக வும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்துள்ளது, சீர்மரபினர் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டும்.

சீர்மரபினர் சமூகத்துக்கு டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், மறவர் சீரமைப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மறவர் நலக்கூட்டமைப்புத் தலை வர் சண்முகசாமி, துணைத் தலை வர் மயில்மணி பாண்டியன், மற வர் அறக்கட்டளை முருகேசன், பொதுச்செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே