ரயில் நிலையத்தில் ஃப்ரீ கோ வெஹிக்கில் என்ற நவீன வாகனம் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படையினர், நடைமேடைகளில் வேகமாக பயணிக்க உதவும் விதமாக “ஃப்ரீ கோ வெஹிக்கில்” என்ற நவீன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காந்தியின் திருவுருவ படத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின்படி, ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தி ரயில் நிலையங்களை அதிகாரிகள் தூய்மைப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான “ஃப்ரீ கோ வெஹிக்கில்” என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

முழுமையாக பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த வாகனம் 14 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டுள்ளது. இதன்மூலம் நடைமேடைகளில் வேகமாக பயணித்து பாதுகாப்பு பணிகளை பாதுகாப்பு படையினர் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 6 வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரயில் நிலைய குப்பை கழிவுகள் தொடர்பாக புகார் அளிக்க SAFAI என்ற மொபைல் செயலியும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே