நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்!

ரயில்சேவைக்கான கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

ரயில் சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என ஏற்கனவே இந்திய ரயில்வே துறை அறிவித்திருந்தது.

அதன்படி, ரயில் கட்டண உயர்வு குறித்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏசி அல்லாத அனைத்து வகுப்பு சாதாரண ரயில்களின் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல் மெயில் மற்றும் விரைவு ரயில்களின் அனைத்து வகுப்பு சேவைக்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்பு ஏசி ரயில் சேவைக்கான கட்டணங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

மாற்றப்பட்ட இந்த  ரயில் சேவைக்கான கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலாவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், ரயில் பயண கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சூப்பர் பாஸ்ட் கட்டணம், ரிசர்வேசன் கட்டணம், ஜிஎஸ்டி கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் வழக்கம் போல் அவை வசூலிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 – 2015 ஆம் ஆண்டில் ரயில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 ஆண்டுகளுக்குப் பின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான நவீன வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே