ரயில்வே துறை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெறக் கோரி சென்னையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய கனிமொழி எவ்வகையிலாவது இந்தியை நுழைத்து விட பாஜக அரசு துடித்துக் கொண்டிருப்பதாகவும், ரயில்வேயின் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார்.
தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதித்த நிலையில், ரயில்வே துறையில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
பின்னர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு வகிக்கும் ராகுல் ஜெயின் இடம் மனு அளித்தார். இதில் திமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.