மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்துள்ள நிலையில், ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகள் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பித்தன.
ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 150 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது.
ஆக்சிஸ் வங்கி, ஹெச்.சி.எல் டெக், ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 538 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 584 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 152 புள்ளிகள் வரை சரிந்து 10 ஆயிரத்து 850 புள்ளிகளாக வர்த்தகமானது.
நிஃப்டியின் துறை சார்ந்த அனைத்து குறியீட்டு எண்களுமே 1 சதவீதம் சரிவுடனயே வர்த்தகமாகி வருகின்றன