மின்கம்பியை மிதித்ததில் 14வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை முகலிவாக்கத்தில், சாலையோர பள்ளத்தில் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின்கம்பியை மிதித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக மாநகராட்சி சார்பாக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு அப்பணிகள் நிறைவடையாத நிலையில், பள்ளங்களை தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் மணல் நிரப்பி மூடியுள்ளனர். இந்நிலையில், மழை காரணமாக மணல் சரிந்ததில், சாலைக்கடியில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி நீட்டிக் கொண்டிருந்தது.

நேற்று இரவு அந்தவழியாக நடந்து சென்ற முகலிவாக்கம் தனம் நகரைச் சேர்ந்த 14வயது சிறுவன் தீனா, மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பிகளை சரிசெய்யவும், மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே