மாணவர் இர்ஃபான் கைது செய்யப்படவில்லை : சிபிசிஐடி போலீசார் விளக்கம்

நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் மாணவர் இர்ஃபான் கைது கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் வேலூரை சேர்ந்த இர்ஃபானின் தந்தை ஷபியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவர் இர்ஃபான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இர்ஃபான் கைது செய்யப்படவில்லை என சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மாணவர் இர்ஃபான் வெளிநாட்டில் உள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் விளக்கமளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே