மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை – தொழிலதிபர் கைது

சென்னையில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சாமுவேல். தேவாலயத்துக்கு செல்லும்போது வின்சென்ட் என்பருக்கு இவர் நண்பர் ஆகியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட சாமுவேல் அவர்களின் மகன் ஜோஸ், வின்சென்ட் – இன் மகளான தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜோசை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

விசாரணையில் தொழிலதிபரான ஜோஸ் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தது அம்பலமானது. நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே