மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த தற்கொலை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணிக்கும் ஆத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்திக்கும் திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் ஆனந்தி கம்மாபுரத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் விருத்தாசலத்தில் உள்ள வளையல் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று வீரமணி வந்து தன் மனைவியை குடும்பம் நடத்த அழைத்ததாகவும் அதற்கு ஆனந்தி மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வீரமணி விருதாச்சலம் மணிமுத்தாறு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் வீரமணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே