மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத் திடலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.