பொறியியல் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை சேர்ப்பு

முதுநிலைப் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக 5 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பரிந்துரையின்பேரில் யோகா, இந்திய அரசியலமைப்பு, தத்துவயியல் உள்ளிட்ட 5 பாடங்கள் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த 5 பாடங்களில் மாணவர்கள் ஏதேனும் ஒன்றை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்றும், இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் வர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விருப்பப் பாடங்களுக்கு தேர்வோ, மதிப்பெண்களோ கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தத்துவயியல் விருப்பப் பாடத்தில் வரும் 5 அலகுகளில் ஒன்றில் பகவத் கீதை இடம் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே