நீட் பயிற்சியில் காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் – செங்கோட்டையன்

நீட் பயிற்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் சி.பி.எஸ்.இ. பள்ளி மேனேஜ்மேண்ட் அசோசியேஷன் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் அணைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே