பேனர் விழுந்து இறந்தது எதார்த்தமாக நடந்த விஷயம் – பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் மென்பொறியாளர் சுபஸ்ரீ இருந்தது அவரது தலைவிதி என்கிற ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சர்ச்சை ஆகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நடைபெற்ற திமுக வின் முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

அப்போது பேனர் விழுந்தது எதேச்சையான ஒன்று என்றும், அந்தப் பெண் அந்த நேரத்தில் அங்கு வரவேண்டும், காற்றில் பேனர் விழவேண்டும், தொடர்ந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி அந்தப் பெண் மீது ஏறி, அந்தப் பெண் இறக்க வேண்டும் என விதி இருந்துள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே