புதிய வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை – சவரன் ரூ.30,120!

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

ஒரு சவரன் தங்கத்தின் விலை முதல் முறையாக 30 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

சென்னையில் நேற்று வர்த்தக நேர முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 832 ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 30 ஆயிரத்து 120 ரூபாயாக உயர்ந்தது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 36 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 765 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வருகிறது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தம் காரணமாக பாதுகாப்பு என்று கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்திற்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து, விலையும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

கடந்த 40 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சென்னையில் ஒரு சவரனுக்கு 3640 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே