தஞ்சை பெரிய கோவிலில் 21 அடி உயரமுள்ள தங்க கலசம் பொருத்தப்பட்டது

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி தங்கமுலாம் பூசப்பட்ட பன்னிரன்டரை அடி உயர கோபுர கலசம் 9 பாகங்களாக பிரித்து கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது.

வரும் பிப்ரவரி மாதம் 5 ம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பன்னிரன்டரை அடி உயர கோபுர கலசம் கடந்த 5 ம் தேதி கோபுரத்தில் இருந்து கீழே இறக்கி அதற்கு தங்க முலாம் பூசும் பணி ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இது நிறைவு பெற்று இன்று கோபுரத்தின் உச்சியில் ஏற்றும் பணி காலையில் தொடங்கியது.

பிரமாண்டமான கோபுர கலசம் 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு கயிறு கட்டி கோபுரத்தின் மீது ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டது.

அங்கு 9 பாகங்களிலும், 400 கிலோ வரகு தானியம் நிரப்பப்பட்டு ஒன்றாக பொறுத்தப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே