பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என கூறினார்.
புதிய பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும் என குறிப்பிட்டார்.
90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.