பீகாரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டு

பீகார் தலைநகர் பாட்னா அருகே சோனாரு என்ற இடத்தில் வெங்காய குடோனில் இருந்து 328 மூட்டை வெங்காயத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தனது குடோனில் இருந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் திருடப்பட்டுள்ளதாகவும், வெங்காயத்தை கூட திருடுவார்கள் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் வியாபாரி தீரஜ்குமார் வருத்தத்துடன் தெரிவித்துவுள்ளார்.

வட மாநிலங்களில் மொத்த வியாபார சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் 328 மூட்டை வெங்காயம் திருடப்பட்டது பேரதிர்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீரஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட வெங்காயத்தை மீட்க பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருவதாகவும் ஃபதுஹா காவல் நிலைய போலீஸ் மனீஷ் குமார் கூறியுள்ளார்.

வரத்து குறைவு காரணமாக நாட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி வெங்காய திருட்டால் வியாபாரிகளும் கலக்கமடைந்துள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே