கோவையில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செட்டி வீதியில் உள்ள வனஜா என்பவரது 2 அடுக்குமாடி வீடு கனமழையால் இடிந்து விழுந்ததை அடுத்து அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு கோவை மாவட்ட ஆட்சியரான ராசாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். 

வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கியதாக கூறப்பட்டதை அடுத்து இடிபாடுகளில் சிக்கி ஸ்வேதா (27) மற்றும் கோபால்சாமி (70) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அதனையடுத்து விடிய விடிய மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் 6 வயது சிறுவன் உட்பட 4 பேரை காயங்களுடன் மீட்டெடுத்தனர்.

அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கஸ்தூரியம்மாள், மணிகண்டன் ஆகியோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே