28 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்..!!

சீனாவில் ஏறத்தாழ ஒரே நாளில் 10 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட அதிசயம் நடந்துள்ளது. சீனாவின் சாங்சா என்ற நகரத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

PRE FABRICATION என்ற முறையில் முன்னரே தயாரிக்கப்பட்ட கட்டுமான தொகுப்புகளை கொண்டு கட்டப்பட்டதால் வேகமாக கட்டி முடிக்க முடிந்ததாக அதைக் கட்டிய பிராட் குரூப் என்ற நிறுவனம் கூறியுள்ளது.

28 மணிநேரம் 45 நிமிடங்களில் முழு கட்டுமானமும் முடிவடைந்த நிலையில் அதன் காட்சித் தொகுப்பை கட்டுமான நிறுவனம் சமூக தளங்களில் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே