பிளாஸ்டிக்கை ஒழிக்க இயற்கையின் நண்பனான பனைமர பொருட்களை பயன்படுத்துமாறு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டிணம் கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேவிபட்டிணத்தின் முக்கிய பகுதிகள் வழியாக பேரணி சென்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், இராமநாதபுரத்தில் 2 கோடி பனைமரங்கள் இருப்பதாகவும், அவற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இயற்கையின் நண்பனான பனைமர பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக்கை ஒழிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.