பிரதமர் மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாகக் கூறிய இம்ரான் கான்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.வில் ஆற்றிய உரையின் போது, மோடியை இந்திய குடியரசுத் தலைவர் என தவறாகக் கூறினார்.

கிரிக்கெட் வீரராக இருந்து பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் ஐ.நா.வில் தனது முதல் உரையை நேற்று நிகழ்த்தினார். அப்போது, அவரது உரையின் பெரும்பகுதி இந்தியாவுக்கு எதிராகவே அமைந்திருந்தது.

அவருக்கென ஒதுக்கப்பட்ட 15 முதல் 20 நிமிடங்களை மீறி அவர் ஆற்றிய உரையில் இந்தியப் பிரதமர் என குறிப்பிடுவதற்கு பதில் மோடியை இந்திய குடியரசுத் தலைவர் மோடி என தவறாகக் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே ஈரானில் நிகழ்த்திய உரை ஒன்றில் ஜெர்மனி – பிரான்ஸ் எல்லைப் பகுதி எனக் குறிப்பிடுவதற்கு பதில், ஜெர்மனியும் ஜப்பானும் எல்லையைப் பகிர்ந்து கொள்வதாக இம்ரான் கான் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் பிரதமரை, குடியரசுத் தலைவர் மோடி எனக் கூறி இம்ரான்கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே