இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சி தொடக்கம்

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப மாணவர்கள் பங்கேற்றுள்ள, ஹேக்கத்தான் போட்டி, சென்னை ஐஐடியில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் – இந்தியா ஹேக்கத்தான் 2019 போட்டி, சென்னை அடையாறில் உள்ள ஐஐடியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப மாணவர்கள் 120 பேர் கலந்து கொண்டனர்.

குழு, குழுவாக அவர்கள் பிரிக்கப்பட்டு ஹேக்கத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சியை, மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சஞ்சய் சாம்ராவ் தோத்ரி தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் எதிர்காலைத் தேவைகள், மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதற்கான யோசனைகள் மற்றும் வடிவமைப்புகளை கொடுக்க வேண்டும் என்பது போட்டியின் விதி.

இதில் சிறப்பான யோசனைகளை வழங்கி வெற்றி பெறும் மூன்று குழுக்களுக்கு வரும் 30 ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பிரதமர் நரேந்திரமோடி பரிசுகளை வழங்க உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே