பிகில் படத்தின் “உனக்காக” பாடல் Youtube ல் ரிலீஸ்.

விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள உனக்காக என்ற மெலடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ஸ்ரீகந்த் ஹரிஹரன், மதுரா தாரா தல்லூரி பாடியுள்ளனர்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “ ‘உனக்காக’ பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் பேக் வித் மை டார்லிங் நயன்தாரா என்றும்” அட்லீ குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே