பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் கடத்தப்பட்ட சிறுமி

சென்னை மாதவரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரு சக்கர வாகனத்தில் சிறுமி கடத்தி செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது.

கடந்த 23ஆம் தேதி மாதவரத்தில் சிறுமி ஒருவரை அவரது தந்தையை அழைத்து வரச் சொன்னதாகக் கூறி ஒருவன் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றான்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்ற அவன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட பயந்துபோன அவர் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய மாதவரம் போலீசார் சிறுமியை கடத்திய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த முரளி என்பவனை கைது செய்தனர்.

இந்த நிலையில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் முரளி கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே