பள்ளிச்சிறுமியை கர்ப்பமாக்கிய மோசடி நபர் போக்சோவில் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுக்கா, நீளவேலி நெய்வாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். உழவு எந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ரஞ்சித் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனதை அடுத்து அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே