ரவுடி பாட்டில் மணி பரிதாபமாக உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் சிவகாசியை சேர்ந்த பிரபல ரவுடி பாட்டில் மணி.

இவர் தனது கூட்டாளியுடன் செய்யாறு அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து பாட்டில் மணியை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய பாட்டில் மணியை காவல்துறையினர் விரட்டினர்.

அப்போது வடவாமந்தல் பகுதியில் உள்ள கிணற்றில் ரவுடி தவறி விழுந்து உயிரிழந்தார்.

காவல்துறையினர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த பாட்டில் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே