பணி நேரத்தில் டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட ஊராட்சி செயலாளர்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அலுவலகத்தில் பணி நேரத்தில் டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிட்ட ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கம்பட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றிவருகிறார்.

இவர் மீது தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் கழிவறை கட்டுதல் உள்ளிட்டவற்றில் முறைகேடாக அனுமதி அளித்துள்ளார் என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அலுவலக நேரத்தில் முறையாக பணிகளைச் செய்யாமல் டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்து வெளியிடுவதில் ராஜேஸ்வரி அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ராஜேஸ்வரி புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே