ட்விட்டர் : பதிவிடப்பட்ட ட்வீட்களை திருத்திக்கொள்ளும் வசதி அறிமுகம்..!!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம், ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த சேவையில் பயனர்களால் பதிவிடப்பட்ட ட்வீட்களை திருத்திக்கொள்ளலாம். நமக்குப் பிடித்த ட்வீட்களை சேமிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முடியும்.

ட்விட்டர் புளூ சேவைக்கான ஆரம்ப விலையாக மாதம் 210 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இச்சேவை ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தொடங்கப்படவிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே