நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பு..உச்சநீதிமன்றம்!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனை விவரங்கள் தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதற்கு முன்பு தலைமை நீதிபதி பதவி வகித்தவர்களை விமர்சித்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து நீதிமன்றம் தாமாக முன் வந்து பிரஷாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே