நிலாவை நோக்கி பயணிக்கிறது லேண்டர் விக்ரம்

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

விக்ரம் லேண்டர் பிரிந்து உள்ளதை அடுத்து சந்திராயன் 2 விண்கலத்தில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் மேலும் குறைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. நாளை மறுநாளைக்குள் குறைந்தபட்ச 36 கிலோமீட்டர் தொலைவு கொண்ட நிலவன் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

36 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபடியே விக்ரம் லேண்டரை நிலாவில் தரை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். வரும் 7-ம் தேதி அன்று அதிகாலை 1.40 மணிக்கு லேண்டரை நிலவில் தரை இறக்கும் பணிகள் தொடங்கும். அடுத்த 15 நிமிடத்தில் லேண்டர் தரை இறங்கிவிடும்.

லேண்டர் தரை இறங்குவதற்கு முன்னதாக “ஆர்பிட்டர்” என்ற கருவி தனியாக பிரித்து விடப்படும். ஆர்பிட்டர் கருவி தொடர்ந்து நிலவை சுற்றி கொண்டே இருக்கும். நிலவின் எந்த இடத்தில் லேண்டர் தரை இறங்கியதோ, அதே இடத்தில் 14 நாட்களும் நின்றபடி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதற்காக லேண்டர் அமைப்புக்குள் மூன்று அதிநவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. லேண்டர் தரை இறங்கிய பின்னர் அதிலிருந்து ரோவர் என்னும் ஆறு சக்கர வாகனம் வெளி கொண்டுவரப்பட்டு நிலாவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கும்.

ரோவரில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கருவிகள் நிலவில் எந்த அளவுக்கு தண்ணீர் உள்ளது?? வேறு என்னென்ன கனிமங்கள் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும். லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள கருவிகள் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் ஆர்பிட்டர் மட்டும் ஓராண்டுகள் நிலவை சுற்றி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே