நாட்டின் பத்து மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கர்நாடகம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மத்திய பிரதேசம் மற்றும் மத்திய மகாராஷ்ராவின் பல பகுதிகளில் கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இங்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மேலும் குஜராத், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் அங்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே