நவராத்திரியின் முதல் நாளான இன்று காலை டெல்லி கல்காஜி மற்றும் ஜான்டேவாலான் கோவில்களில் சிறப்பு ஆரத்தியுடன் வழிபாடு நடைபெற்றது.
கொல்கத்தாவில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்தார். துர்கா பூஜைக்காக அவர் எழுதிய பாடல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி காலங்களில் புகழ்பெற்றவை கார்பா நடனங்கள். இந்த ஆண்டும் வடோதரா நகரில் வழக்கமான உற்சாகத்துடன் கார்பா நடனப் பயிற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்
இதே போன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் கார்பா மற்றும் தாண்டியா நடனங்களை ஆடி பெண்கள் நவராத்திரியை கொண்டாடினர்.
மைசூரில் இன்று தசரா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இன்று காலை சாமுண்டி மலையில் நாவலாசிரியர் பைரப்பா சாமுண்டீஸ்வரிக்கு மலர் தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் மைசூர் மன்னர் வம்சத்தினர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.