நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் விருப்பம் தெரிவிக்கலாம், ஆனால் முடிவை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் எடுப்பார் என்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் ஐ. பெரியசாமி தலைமையில் திமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், முன்னாள் அமைச்சர் பூங்கோதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும் என்றார்.