நடிகை எமி ஜாக்ஷனுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படமாக அவர் பதிவிட்டுள்ளார்.
மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் லண்டனில் வசித்து வருகிறார்.
மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷின் தங்கமகன், விக்ரமுடன் ’ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள எமி , ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்திருந்தார்.

ஜார்ஜ் பெனாய்டோ என்பவரைக் காதலித்து வந்த எமி ஜாக்ஷன், தனது கர்ப்பகால புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். எமி ஜாக்ஷனின் இந்தப் பதிவைப்பார்த்த அவரது நண்பர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
அக்குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என்று பெயரிட இருப்பதாக எமி தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.