தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா, திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
13 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஆண்டு என்றே கருதுகிறேன். நான் கதாநாயகியாக நடித்த கண்ணே கலைமானே, சைரா, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட 7 படங்கள் வெளியாகி உள்ளது. அவற்றில் தெலுங்கில் ஒரு படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. புதுப்புது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதாலும், தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு தரும் ஆதரவும் தான் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது.
ரஜினி – தமன்னா – கமல்
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். அவர்களுடன் நடிக்க தயாராக உள்ளீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு, ‘அவர்களது படங்களை நான் ஒரு ரசிகையாக ரசித்து பார்த்திருக்கிறேன். இருவரையும் நான் சின்ன வயதில் இருந்து கடவுள் மாதிரி பார்த்து வருகிறேன். எனவே, அவர்களுடன் நடிக்க யார்தான் மாட்டேன் என்பார்கள். ரஜினி, கமலுக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இருவருடனும் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.