நடிகர் விஜய் புதிய படத்துக்காக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வார்

போராட்டங்களை தேடிச்செல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்த பின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டது ஏன்?? என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை பரவை பகுதியில் சமுதாய கூடம் மற்றும் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மு.க.ஸ்டாலின் பற்றி பொதுமக்களிடம் அறிக்கை வெளியிட தயாரா?? என்று வினவினார்.

நடிகர் விஜய் தனது புதிய படம் வரும்போது ஏதாவது பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார், பின் எதுவும் தெரியாதது போல் நடந்து கொள்வார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே