பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில், சுபஸ்ரீ சம்பவம் தொடர்பாக அதிமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் நடிகர் விஜய்.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘நடிகர் விஜய் தன்னுடைய புதிய திரைப்படம் வெற்றி பெற பெறவேண்டும் என்பதற்காக தான் இப்படி பேசி வருகிறார்’ என்றும் ‘எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து ஒரு சிலர் மிக மோசமாக அரசியல் செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அதிமுகவை தொட்டவர்கள் கெட்டார்கள் என்பதுதான் வரலாறு’ என்று நடிகர் விஜயை கடுமையாக எச்சரித்துருக்கிறார்.