நடிகர் ரஜினிகாந்த் 6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார் – கராத்தே தியாகராஜன்

நடிகர் ரஜினிகாந்த் ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை அரசியலிலிருந்து விலகியிருக்குமாறு நடிகர் சிரஞ்சீவி கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்தார்.

நண்பர்கள் என்ற முறையில் சிரஞ்சீவி கருத்து தெரிவித்திருப்பதாகவும், ஆனால் ஆந்திர அரசியல் வேறு தமிழக அரசியல் வேறு எனவும் கராத்தே தியாகாராஜன் கூறினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே