நடிகர் திலகம் சிவாஜி பாடலை கிண்டல் செய்யவில்லை : நடிகர் விவேக்

பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

விழாவின் போது பேசிய நடிகர் விவேக் 1960-இல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரியான “நெஞ்சில் குடி இருக்கும்” என்ற பாடலை விட, அதை விஜய் சொல்லும்போது அதிக வரவேற்பு கிடைத்ததாக கூறி இருந்தார்.

விவேக்கின் இந்த கருத்திற்கு சிவாஜி சமூக நல பேரவை கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனிடையே இதற்கு நடிகர் விவேக் விளக்கம் அளித்து உள்ளார்.

இதே சிவாஜி பாடலின் முதல் வரியான “நெஞ்சில் குடி இருக்கும்” பாடல் காதல் உணர்வை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நடிகர் விஜய் அதை சொல்லும்போது மந்திரசக்தி வார்த்தையாக இருக்கிறது என்றும், இதனைத்தான் பேசினேன் என்றும் அவர் கூறினார்.

அன்பு உள்ளங்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்தார்.

பிகில் படம் வெளியாகும் முன்பே, படம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இது திரைப்படத்திற்கான விளம்பரமா?? என்று பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே