நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 100 பெண்களுக்கு இலவச தலைக்கவசம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 100 பெண்களுக்கு நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் இலவச தலை கவசமும், விதைப்பந்தும் வழங்கப்பட்டன.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபஸ்ரீ என்ற இளம் பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களை பேனர், டிஜிட்டல் பிளக்ஸ் வைக்காமல் சமூக சேவை பணிகளில் ஈடுபட வலியுறுத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து, சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் இன்று வெளியான நிலையில், பரமத்தி வேலூரில் உள்ள சிவா திரையரங்கத்தில் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த ஓட்டுனர் உரிமம் வைத்திருந்த 100 பெண்களுக்கு தலைக்கவசம் மற்றும் விதைப்பந்துகளை பரமத்தி வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் பழனிசாமி மூலமாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் வழங்கினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே