தோனியை வீழ்த்திய விராட் கோலி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 போட்டிகளில் வெற்றிகளை தேடித் தந்துள்ளார். தோனி கேப்டனாக 27 வெற்றிகளை பதிவு செய்து இருந்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அதனை விராட் கோலி முறியடித்துள்ளார்.

அதை போன்று குறைந்த போட்டிகளில் 50 பேரை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். இதற்கு முன் தோனி 15 போட்டிகளில் நிகழ்த்திய இந்த சாதனையை ரிஷப் பந்த் 11 போட்டிகளிலேயே முறியடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே