தோனிக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

மற்றவர்கள் அழுத்தம் கொடுப்பதற்குள் தோனி தாமாகவே அணியில் இருந்து வெளியேற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2019 ம் ஆண்டு  உலக கோப்பை தொடருக்கு பிறகு இருந்தே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர். ஆனால் இதற்கு தோனி, தற்போதுவரை பதிலளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தோனிக்கான நேரம் நெருங்கிவிட்டது எனவும் அவரது எதிர்காலம் குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் தோனிக்கு உள்ளது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதோடு தோனிக்கான மாற்று வீரர்களாக ரிஷப்பந்தும், சன்ஜூ சாம்சனும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட கவாஸ்கர், உலக கோப்பை டி-20 போட்டியில் தோனிக்கு பதிலாக, இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், மற்றவர்களிடம் இருந்து அழுத்தம் வருவதற்குள் தோனி தாமாக முன்வந்து ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார். 

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே