தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நகைப்பை ஏற்படுத்திய குட்டி மாணவி

மலேசியாவில் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமி தொடர் ஓட்டத்தில் எதிர்த் திசையில் ஓடிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பாஸ் குவாலா மு என்ற பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. இதில் பாலர் பள்ளியைச் சேர்ந்த ஆய்ஷா என்ற குட்டி மாணவியும் பங்கேற்றார்.

அப்போது மாணவிகளுக்கு இடையே 200 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

கையில் உருளையை வைத்துக்கொண்டு மாணவிகள் ஆர்வத்துடன் ஓடினர்.

3 பேர் கொண்ட தொடர் ஓட்டத்தில் உருளை கைமாற்றப்பட்டதும் மற்ற இரு மாணவிகளும் சரியான பாதையில் ஓட, ஆய்ஷாவோ தலைதெறிக்க எதிர்த்திசையில் ஓட்டம் பிடித்தார்.

இதனைக் கண்ட ஆசிரியர்கள் விரட்டிச் சென்று ஆய்ஷாவைப் பிடித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே