இரட்டையர்களில் முதல் குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து பிறந்த இரண்டாவது குழந்தை : ஓர் ஆச்சரிய நிகழ்வு!!

ஒரே தாயிடம் உருவான இரட்டையர்களில் ஒரு குழந்தைக்கு அடுத்த குழந்தைக்கும் மிஞ்சிப்போனால் சில நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம், சில விதிவிலக்குகள் தவிர்த்து.

ஆனால் ஒரே கருவில் உருவான ஒரு குழந்தை பிறந்து பத்தாண்டுகள் கழித்து அடுத்த குழந்தை பிறந்துள்ள சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.அதாவது, Ms Wang (41)க்கு இயற்கையாக குழந்தை உருவாகாததால்,

சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி, 2010ஆம் ஆண்டு Lu Lu என்ற செல்லப்பெயர் கொண்ட ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார் Wang.

பின்னர் பத்தாண்டுகள் கழித்து Lu Luவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர் அவனது பெற்றோர். ஆகவே, மீண்டும் Lu Lu பிறந்த அதே மருத்துவமனைக்கு தம்பதியர் செல்ல, அங்கு அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, Lu Lu உருவான அதே நேரத்தில், அதே உயிரணுக்களை இணைத்து மேலும் சில கருமுட்டைகளை உருவாக்கி சேமித்து வைத்திருக்கிறார்கள் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள்.

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டதும், அதே கருமுட்டைகளிலிருந்து இன்னொன்றை எடுத்து அதை Wangஇன் கருப்பையில் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

தற்போது, 2020இல், கடந்த செவ்வாயன்று அதே மருத்துவமனையில் இன்னொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் Wang.

அந்த குழந்தைக்கு Tong Tong, என்று பெயர் வைத்துள்ளார்கள் அதன் பெற்றோர், அதன் பொருள் ‘same same’ அதாவது இரண்டாவது குழந்தை முதல் குழந்தையை போலவே இருக்கிறான் என்று பொருள்.

உண்மையில் Lu Luவும் Tong Tongம் பத்தாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள் என்கிறார்கள் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 384 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே