தொடர்ந்து உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து முப்பதாயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் 29,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஒரு சவரன் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தங்கம் விலை நேற்றைவிட சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 33 ரூபாய் உயர்ந்து 3,713 ரூபாயாக உள்ளது.

அதை போன்று ஒரு கிலோ வெள்ளி விலையும் 50,000 ரூபாயை கடந்தது. நேற்று கிலோ ஒன்று ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று ஆயிரத்து 900 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 90 காசுகள் உயர்ந்து 51 ரூபாய் 90 காசுகள் ஆக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே